பரமக்குடி : பரமக்குடி எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.
1956 ஜன.19ல் இந்திய ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசிய மயமாக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் நடந்த வாயிற்கூட்டத்தில் எல்.ஐ.சி., கிளை சங்க தலைவர் கோட்டையன் வரவேற்றார்.
கிளை நிர்வாகி ரவிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சங்கர் ராஜ், பொது காப்பீட்டு துறை ஊழியர் சங்கம் அண்ணாதுரை பேசினர்.
எல்.ஐ.சி., முகவர் சங்கம் சார்பில் ஷாஜகான், குருசாமி வாழ்த்தினர்.அனைத்து ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.