திருப்பூர்:வேகத்தடையில், வெள்ளை குறியீடு செய்யாததால் நடராஜா தியேட்டர் ரோட்டில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு, தாடிக்கார முக்கு பகுதியில் துவங்கி, டவுன் ஹால் சந்திப்புவரை, ஒருவழி பாதையாக இருக்கிறது. பார்க் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் வளையும் போது, நஞ்சப்பா பள்ளி அருகே விபத்து ஏற்பட்டது.
பார்க் ரோட்டில் வரும் வாகனங்கள் பாதுகாப்பாக திரும்பும் வகையில், நடராஜா தியேட்டர் ரோட்டில், 'கான்கிரீட்' பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. பார்க் ரோட்டில், பல ஆண்டுகளாக வேகத்தடையும் இருக்கிறது.
நடராஜா தியேட்டர் ரோடு வழியாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், பார்க்ரோடு சந்திப்பு பதியில், புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடை அமைத்து, சில நாட்களாகியும், வெள்ளை குறியீடு செய்யாததால், புதிய வேகத்தடை அமைத்தது தெரியாமல், கார் மற்றும் 'டூ வீலரில்' வருவோர், விபத்தில் சிக்குகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''பார்க் ரோட்டில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும். நடராஜா தியேட்டர் ரோட்டில், புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில், வெள்ளை பெயின்ட் மூலமாக, வேகத்தடை குறியீடு அமைக்க வேண்டும்.
தேவையெனில், குறைவான வேகத்தில் செல்லுமாறு, அறிவிப்பு பலகை கூட வைக்கலாம். அதிகாரிகள் சென்று வரும் பாதை என்பதால், புதிய வேகத்தடை அமைப்பது, வேகத்தடையை அகற்றுவது என செய்தாலும், விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்,' என்றனர்.