திருவாடானை : வறட்சி நிவாரணம் பெறுவதற்காக விவசாயிகள் ஆவணங்களை வி.ஏ.ஓ.,க்களிடம் கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பெய்ய தவறியதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் பயிர்கள் கருகியது. விளைச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் துவங்க உள்ளது.
எனவே வறட்சி நிவாரணம் பெற விவசாயிகள்வி.ஏ.ஓ.,க்களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் இந்த தாலுகா விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புக் நகல், சிட்டா அடங்கல் நகல், அலைபேசி எண் ஆகியவற்றை ஆர்வமாக ஒப்படைத்து வருகின்றனர்.