கோடம்பாக்கம், சென்னை, கோடம்பாக்கம் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது.
அப்போது எதிரே, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், 21, என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, இருவரது வாகனங்களும் நேருக்குநேர் பயங்கரமாக மோதின.
இதில், தனுசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்சை வரவழைத்து, தனுஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.