சென்னை, சென்னையில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, நிலுவையில் உள்ள, அபராத தொகையை வசூலிக்க, 12 உதவி கமிஷனர் அலுவலகங்களில், 'கால்சென்டர்'கள் செயல்படுகின்றன.
இவற்றின் வாயிலாக, வாகன ஓட்டிகளின் 'மொபைல் போன்'களுக்கு தொடர்பு கொண்டு, அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால், பரங்கிமலை போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர், 76 வாகன ஓட்டிகளிடம், 269 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்கான, 96 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை, 'ஆன்லைன்' வாயிலாக, ஒரே நாளில் வசூலித்துள்ளார். இவரை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.