ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ்.பாய்ஸ் வாலிபால் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட வாலிபால் போட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
பள்ளி செயலர் கிருஷ்ணன், கமிட்டி உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமை ஆசிரியர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கேற்றதில் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி., சபரிநாதன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் கைப்பந்து கழக செயலாளர் துரைசிங், ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பிரகாசம், சந்திரன், கைப்பந்து கழக செயலாளர் செல்வகணேஷ் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கைப்பந்து கழக தலைமை நிலைய செயலாளர் பொன்னியின் செல்வன், முரளி, வாலிபால் கிளப் தலைவர் முருகன், உடற்கல்வி இயக்குனர்கள் வருண் குமரன், ராஜ்குமார் செய்தனர்.