திருப்பூர்:காங்கயம், நெடுஞ்சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் காரணமாக பாதிப்பும், அவதியும் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோடு, நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த ரோடு திருப்பூர் நகரப் பகுதியில் சிலஇடங்களில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், பள்ளக்காடு புதுார் அருகே கழிவுநீர் கால்வாய் ரோட்டைக் கடந்து செல்லும் இடத்தினருகே ரோடு அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த இடத்தில் ரோட்டோரம் மண் வெட்டி அப்புறப்படுத்தி அதன் மீது ஜல்லி பரப்பிரோடு போடும் பணி நடக்கிறது.
ரோட்டின் குறுக்கில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ள சிறு பாலம் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பாலிதீன் கழிவுகள் தேங்கி அடைப்பு எற்பட்டு உள்ளது.
இதனால், அப்பகுதியில் கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழியின்றி, ரோட்டிலும், ரோடு அகலப்படுத்தும் பணி மேற்கொண்டுள்ள இடத்திலும் பெருமளவு தேங்கி நிற்கிறது.
பிரதான ரோடாகவும், அதிகளவிலான மழை நீர் மற்றும் கழிவு நீர் கடந்து செல்லும் இடமாகவும் உள்ள பகுதியாகஉள்ளது. ரோட்டின் குறுக்கில் உள்ள சிறுபாலம் அடைப்பு நீக்கி சரி செய்ய வேண்டும்.
மேலும் பாலம் அகலப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.