மதுரவாயல், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை போரூர், லட்சுமி நகர், மூர்த்தி அவென்யூவைச் சேர்ந்தவர் ஈஸ்வர், 25. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், மதுரவாயல் ஸ்ரீதேவி நகர், 9வது தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த இருவர், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஈஸ்வரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின் ஆபாசமாக பேசி, ஈஸ்வரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பினர்.
பலத்த காயமடைந்த ஈஸ்வர், இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்த நிலையில், இருவரையும் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரவாயல், புதிய சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சூர்யா,19, ஆலப்பாக்கம், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கார்த்திக், 19, எனத் தெரிந்தது. கைதான இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.