வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிப்பீர்களா? இது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு

Added : ஜன 20, 2023 | |
Advertisement
திருப்பூர்;கண்காணிப்பு அலுவலரின் 'அறிவுரைப்படி', வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், குண்டடம் ஒன்றியம், ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார்.குண்டடம் ஒன்றியம் காரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சடையபாளையம்
 வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிப்பீர்களா? இது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு

திருப்பூர்;கண்காணிப்பு அலுவலரின் 'அறிவுரைப்படி', வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், குண்டடம் ஒன்றியம், ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார்.

குண்டடம் ஒன்றியம் காரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சடையபாளையம் தொடக்கப்பள்ளிகளில், சமையல் கூடம், முதல்வரின் காலை உணவு திட்ட பதிவேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஊத்துக்குளி ஒன்றியம், சேனாதிபதிபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பயனாளிகளுக்கு 18,500 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட இலவச வெள்ளாடுகள்; 4.75 லட்சம் மதிப்பீட்டில் செங்கப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணி.


ஆய்வு தீவிரம்



துாய்மை பாரத இயக்கத்தில், விருமாண்டம்பாளையத்தில், 3.27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் துாய்மை பணி; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் காய்ச்சல் முகாம், நடமாடும் மருத்துவமனை ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஜல் ஜீவன் திட்டத்தில், 18.66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு; 11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலக அரங்கில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

அரைத்த மாவு...

கண்காணிப்பு அலுவலர் கருணாகரனின் கள ஆய்வு குறித்தும், ஆய்வுக்கூட்ட விவரம் குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில், அறிக்கை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு முறை ஆய்வு நடத்தும்போதும், 'சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என கண்காணிப்பு அலுவலர் கூறியுள்ளார்,' என்றே அறிக்கை வெளியிடப்படுகிறது.

உண்மையில், வளர்ச்சிப்பணிகளில் உள்ள குறைகளை களைந்து, தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடித்தால், மக்களின் பாராட்டை பெறலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X