ராமநாதபுரம் : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி, இன்டராக்ட் கிளப் ஆப் எம்.எஸ்.டி.எம்.எஸ்., சார்பில், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் முகமதுசதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு கிளப் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
கிளப் மாவட்ட கவர்னர் தினேஷ் பாபு முன்னிலை வகித்தார்.
சாலை பாதுகாப்பு அமைப்பு மாவட்ட தலைவர் நாகேந்திரன் பேசுகையில், சாலையில்செல்லும் போது வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், விபத்தை தடுக்க ஆலோசனைகள் வழங்கினார்.
கிளப் உதவி கவர்னர்கள்செந்தில்குமார், பாபு, முதல்வர் சேகர், செயலாளர் ராஜேஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.