உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைகேட்பு கூட்டம், அனைத்து தாலுகாக்களிலும் இன்று (21ம் தேதி) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது.
அவிநாசி - கருணைபாளையம், தாராபுரம் - தேர்ப்பட்டி, மடத்துக்குளம் - நல்லண்ண கவுண்டம்புதுார், பல்லடம் - புளியம்பட்டி, திருப்பூர் வடக்கு - கணக்கம்பாளையம், திருப்பூர் தெற்கு - குப்பாண்டாம்பாளையம், உடுமலை - குறிஞ்சேரி, ஊத்துக்குளி - செங்கப்பள்ளி ஆகிய பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இதில், குடிமை பொருள் தாசில்தார்கள், வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை கேட்டறிய உள்ளனர்.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புது ரேஷன் கார்டு, நகல் அட்டை குறித்து பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை சாரந்த கோரிக்கைகளை முகாம் வாயிலாக, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.