புதுடில்லி,-குற்றப்பத்திரிகை பொது ஆவணம் அல்ல என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அதை பொது தளத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகையை பொதுமக்கள் இலவசமாக அணுக உத்தரவிடும் பொது நல வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றப்பத்திரிகையை பொது தளத்தில் வெளியிடுவது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகளுக்கு முரணானது. அது பொது ஆவணம் அல்ல. இதை இலவசமாக அணுக, 'ஆன்லைன்' உள்ளிட்ட எந்த பொது தளத்திலும் வெளியிட முடியாது.
இதில் வெளியிட்டால், வழக்கில் தொடர்பில்லாத வர்கள், இதை தவறாகப் பயன்படுத்தக்கூடும். ஆகை யால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.