குவஹாத்தி,- அசாமில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில், லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹானபரா பகுதிக்கு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், டிரைவர் இருக்கைக்குப் பின் மறைத்து கடத்தி வரப்பட்ட 320 கிலோ எடை உள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கஞ்சா அண்டை மாநிலமான மணிப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும், இதன் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர்.