மாமல்லபுரம்:கல்பாக்கத்தில், சென்னை அணு மின் நிலையம் இயங்குகிறது. நிலைய நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில், நலத்திட்டங்களை செயல்படுத்துகின்றன.
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 94 லட்சம் ரூபாய் மதிப்பில், தரைத்தளம், மேல்தளம் என, நான்கு வகுப்பறைகளுடன், கட்டடம் கட்டியது.
மேலும், கூவத்துார் அடுத்த கடலுார் மீனவ பகுதி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகள் கட்டடம் கட்டியது.
இவற்றின் துவக்க விழா, நேற்று நடந்தது. நிலைய இயக்குனர் சுதிர் பி ஷெல்கே, முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக் ஷன் மற்றும் சமூக பொறுப்புக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.