நரிக்குடி : மயானத்திற்கு ரோடு வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வயல்கள் வழியாக கிராமத்தினர் சுமந்து சென்று வருவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நரிக்குடி முள்ளிக்குடியில் மயானத்திற்கு முறையான ரோடு வசதி கிடையாது. இறந்தவர்களின் உடலை ஒரு கி. மீ., தூரத்திற்கு வயல் வழியாக சுமந்து சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் உடல்நல குறைவால் இறந்த கோபாலகிருஷ்ணனை உறவினர்கள், கிராமத்தினர் நெல் விளைந்த வயல்கள் வழியாக அவரது உடலை சுமந்து சென்றனர். வயல்களைக் கடக்க படாத பாடுபட்டனர். பலமுறை ரோடு வசதி கேட்டும் யாரும் கண்டு கொள்ளாததால், இறப்பு சமயத்தில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இறப்பிலாவது நிம்மதியாக கொண்டு செல்ல ரோடு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.