உடுமலை:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது சேவை மையங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலையின் பொது சேவை மையம், சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை மையத்தின் ஆபரேட்டர் பிரசாத் பெற்றுக்கொண்டார்.
இம்மையத்தில், ஓராண்டில், 9,572 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவில், முதலிடமும், மாநில அளவில், 12வது இடமும் இம்மையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.