செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில், பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
இந்த வாகனங்களை, கடந்த சில மாதங்களாக, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், செங்கல்பட்டு நகர போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்மீது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனம் திருடிய 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை மடக்கிப்பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.