மாமல்லபுரம்:திருவண்ணாமலை மாவட்டம், தென்முடியனுார் பகுதி மண்ணாங்கட்டி மகன் முருகதாஸ், 44. கார் ஓட்டுனராக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மாமல்லபுரம் தனியார் விடுதியில், நண்பர்களுடன் தங்கினார். நேற்று அதிகாலை 2:30 மணி வரை, நண்பர்கள் பேசிவிட்டு, தாமதமாக உறங்கினர்.
நேற்று காலை 5:30 மணிக்கு, முருகதாஸை நண்பர்கள் எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் சுயநினைவின்றி கிடந்ததால், மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நீரிழிவு, இரண்டு முறை மாரடைப்பால் முருகதாஸ் பாதிக்கப்பட்டவர். விடுதியில் தங்கியிருந்த பயணி இறந்தது குறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.