பயங்கரவாதம் எங்கிருந்து வெளிப்படுகிறது என்பதை உலக நாடுகள் அறிந்த பின், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தையும் இந்த உலகம் அறிந்துள்ளது.
ஜெ.பி.நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
பாக்., உடன் பேசுங்கள்!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதை என் ரத்தத்தால் எழுதி தர தயார். பாகிஸ்தானுடன் பேச்சை துவங்காத வரை இது முடிவுக்கு வராது.
பரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
'
நோட்டீஸ் போர்டு' பார்லி.,
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட தங்கள் பிரதமருக்கு சவால் விடக்கூடிய பார்லிமென்ட், நேரு ஆட்சி காலத்தில் இருந்தது. ஆனால் இன்றோ, மத்திய அரசு நினைப்பதை அறிவிக்கும், 'நோட்டீஸ்' போர்டு' ஆகவும், அவர்கள் விரும்பும் மசோதாக்களை கேள்வி இன்றி நிறைவேற்றும், 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகவும் மாறிவிட்டது.
சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்