மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'பயோ பிளாக்' தொழில் நுட்பத்தில், மீன் வளர்ப்பு குறித்து, நேற்று பயிற்சி நடத்தப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சித்தார்த் பயிற்சியை துவக்கி வைத்தார். வகுப்புகளை மீன் வளத்துறை உதவிப் பேராசிரியர் சிவக்குமார் விளக்கினார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்போர் பங்கேற்றனர்.
குறுகிய நிலப்பரப்பில் மீன் தொட்டி அமைப்பது, மீன் வளர்ப்பு முறைகள், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களுக்கு அளிக்கப்படும் தீவனங்களான மிதவை தீவனங்கள், அசோலா தீவன வகைகள் குறித்தும், தொட்டிகளில் உள்ள நீர் பரிசோதனை செய்யும் முறைகளையும் விளக்கினர்.