அம்பத்துார்:அம்பத்துார், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி, 30. முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40.
இருவரும், கொரட்டூர், மத்திய நிழற்சாலை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் உள்ள வீட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தனர்.
இதையறிந்த ஆவடி மாநகர காவல் ஆணையரக விபசார தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 10ம் தேதி, இவர்களை கைது செய்தனர். அங்கிருந்த இரு இளம்பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், விபசார வழக்குகளில் இருமுறை சிக்கிய கல்யாணியை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய், நேற்று உத்தரவிட்டார். இந்தாண்டு, இதுவரையில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.