திருக்கழுக்குன்றம்:மானாமதி அடுத்த குன்னப்பட்டு பகுதி, சின்னதம்பி மகன் பொன்னுரங்கம், 47. விவசாயி. மதுபழக்கம் உண்டு. ஜன., 18ல், வீட்டிலிருந்து வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.
மறுநாள், திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டு டாஸ்மாக் கடை அருகில், ஒருவர் இறந்து கிடப்பதை அறிந்து, திருக்கழுக்குன்றம் போலீசார், உடலை மீட்டனர்.
அவரைப் பற்றி விசாரித்தபோது, இறந்தது பொன்னுரங்கம் தான் என, அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். அவர், அதிக மது அருந்தி இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.