வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி,-முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள பலதார திருமணத்துக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய புதிய அரசியல் சாசன அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
![]()
|
முஸ்லிம்களிடையே பலதார மணம் நடைமுறையில் உள்ளது. இதன்படி முஸ்லிம் ஆண், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். 'இந்த நடைமுறை சட்டப்படி செல்லாது' என, அறிவிக்கும்படி, அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து விசாரிக்க, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா, சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ், சுதான்ஷு தலியா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
![]()
|
இந்நிலையில், இந்திரா பானர்ஜி, ஹேமந்த் குப்தா ஆகிய இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்று உள்ளதை அடுத்து, இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைக்கும்படி, மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இது குறித்து நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'இது முக்கியமான வழக்கு. இதை விசாரிக்கும் புதிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும்' என தெரிவித்தது.
Advertisement