காய்கறி சாகுபடியை துவக்கிய விவசாயிகள் தை பிறந்தாச்சு! நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி தீவிரம்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், தை பட்டத்தில், காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பண்ணைகளில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதிகளில், தை
காய்கறி சாகுபடியை துவக்கிய விவசாயிகள் தை பிறந்தாச்சு! நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி தீவிரம்

உடுமலை:உடுமலை பகுதிகளில், தை பட்டத்தில், காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பண்ணைகளில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறி பயிர்கள், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில், தை பட்டத்தில் அதிகளவு காய்கறி சாகுபடி செய்யப்படுவதோடு, மாநில அளவில், பங்குனி, சித்திரை மாத அறுவடையில், அதிகளவு தக்காளி வரத்து சீசன் உள்ள பகுதியாகவும், உடுமலை உள்ளது.

விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு, ஆதாரமாக, இப்பகுதிகளிலுள்ள 30க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன.

ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளும், தலா, 5 லட்சம் முதல், 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். ஒரு ஏக்கருக்கு, தக்காளி நாற்றுக்கள், 10 ஆயிரமும், மிளகாய், 7 ஆயிரம், கத்தரி, 5 ஆயிரம், காலிபிளவர், 10 ஆயிரம் நாற்றுக்கள் தேவை உள்ளது.

இப்பண்ணைகளில், குழித்தட்டுகளில், விதைகள் நடவு செய்து, நாற்றுக்கள் வளர்க்கப்படுகிறது. இதில், தக்காளி, 22 நாட்களிலும், மற்ற காய்கறிகள், 30 நாட்களுக்குள்ளும், விளைநிலத்தில், நடவு செய்ய வேண்டும்.

கடந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகள் இயல்பை விட கூடுதலாக கிடைத்த நிலையில், பாசனம் மற்றும் கிணறு, போர்வெல் என இறவை பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தியாக உள்ளதால், நடப்பாண்டு காய்கறி சாகுபடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தை பட்ட சாகுபடியை துவக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், நாற்றுப்பண்ணைகளில் நாற்றுக்கள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டும், பல்வேறு ரக தக்காளி நாற்றுக்கள் அதிகளவு விற்பனை மற்றும் பதிவு செய்யப்படுவதாக, நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர். நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது:

உடுமலை பகுதிகளில், தை பட்டத்தில், அதிகளவு காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கிடைத்த பருவ மழைகள் காரணமாக, சாகுபடிக்கு தேவையான நீர் இருப்பும் திருப்தியாக உள்ளது. அதனால், நடப்பு தைப்பட்டத்தில், காய்கறி சாகுபடி பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளாக போதிய அளவு சின்ன வெங்காயம் சாகுபடி இல்லாத நிலையில், நடப்பு பருவத்தில், பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல், தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறி சாகுபடியும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது, நாற்றுப்பண்ணைகளில், காய்கறி நாற்றுக்கள் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலும், தக்காளி அதிகளவு நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாற்றுப்பண்ணைகளில், தக்காளி, மிளகாய், கத்தரி, காலிப்பிளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள், முழுமையான அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு, நடவு பணிகளை துவக்கியுள்ளனர். காய்கறி நாற்றுக்கள் பதிவும் அதிகரித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள், அனைத்து பகுதிகளில் காய்கறி சாகுபடி பணி தீவிரமடையும். அதற்கு ஏற்ப, காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாற்றுக்கள், 50 காசுகள் முதல், 80 காசுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X