உடுமலை:உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நடந்தது.
உடுமலை பள்ளபாளையத்தில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் நலனுக்காக ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு யாக பூஜை நேற்று முன்தினம் துவங்கியது.
ஸ்ரீவில்லிப்புத்துார் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமனுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது. யாக பூஜை நேற்று காலை நிறைவு பெற்றது.
இதில், ஜீயர் சுவாமிகள் ஆசியுரை அருளி, பூஜையில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்ட எழுது பொருட்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, உடுமலை திருப்பதி பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.