புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம் காஞ்சியில் கற்போர் எண்ணிக்கை உயரும்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 456 மையங்களில், 7,354 நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், கல்வி கற்றுக்கொடுக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, எழுத்தறிவு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என, நம்பிக்கை பிறந்துள்ளது.தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 5.58 லட்சம் நபர்களுக்கு, எழுதவும், படிக்கவும் தெரியாது என, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு விபரத்தில்
 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம் காஞ்சியில் கற்போர் எண்ணிக்கை உயரும்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 456 மையங்களில், 7,354 நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், கல்வி கற்றுக்கொடுக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, எழுத்தறிவு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என, நம்பிக்கை பிறந்துள்ளது.

தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 5.58 லட்சம் நபர்களுக்கு, எழுதவும், படிக்கவும் தெரியாது என, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு விபரத்தில் தெரிய வந்துள்ளது.

இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 2,668 ஆண்கள், 5,419 பெண்கள், இருவர் மாற்று பாலினத்தவர் என, மொத்தம் 8,089 நபர்கள் கல்வி கற்கவில்லை என, தெரிய வந்துள்ளது.


200 மணி நேரம்இதுபோன்ற நபர்களுக்கு, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக, மீண்டும் பாடம் கற்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் துவக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம், 2022 முதல் 2027ம் ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும், ஐந்தாண்டுக் கல்வி திட்டமாகும்.

தினசரி 2:00 மணி நேரம் என, கணக்கீடு செய்து மொத்தம், 200 மணி நேரத்திற்கு ஆரம்ப கல்வியை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 456 மையங்களில் தன்னார்வலர்கள் மூலமாக, 7,354 நபர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், ஆரம்ப கல்வியை கற்றுத்தர உள்ளனர்.

இந்த திட்டம் பொது மக்களை சென்றடையும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளனர்.

ஆரம்பக் கல்வியை சொல்லிக்கொடுக்கும் தன்னார்வலர்களுக்கு, அருகில் இருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் வழிகாட்டி நெறிமுறைகளை எடுத்துரைப்பார்கள் என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

குறிப்பாக, 100 நாள் வேலை நடைபெறும் இடங்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில், தன்னார்வலர்களே சென்று புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், கல்வியை கற்றுத்தர உள்ளனர்.

இதன் மூலமாக, கல்வி கற்போரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


எழுத்து உபகரணங்கள்இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில், 15 வயத்திற்கு மேற்பட்டோர் கல்வி கல்லாதவர்களுக்கு, தன்னார்வலர்களின் மூலமாக, கல்வி கற்றுக்கொடுக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம், கரும்பலகை உள்ளிட்ட எழுத்து உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்பக் கல்வியை பெறும் நபர்களின் மூலமாக, மாவட்டத்தில் எழுத்தறிவு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றியம் மையங்கள் கற்போர் எண்ணிக்கை


காஞ்சிபுரம் 78 1,346


வாலாஜாபாத் 64 1,210


உத்திரமேரூர் 114 1,900


ஸ்ரீபெரும்புதுார் 102 1, 398


குன்றத்துார் 98 1,500


மொத்தம் 7354 456


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X