மோசமான சாலைக்கு விமோசனம்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
அன்னூர்:தினமலர் செய்தி எதிரொலியாக மோசமான சாலைக்கு விடிவு பிறந்தது.அன்னூர், மோப்பிரிபாளையம், அவிநாசி பேரூராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக அன்னூரில் இருந்து வடக்கலூர் செல்லும் பாதையில் எட்டு இடங்களில் ஆறு அடிக்கு ஆறடி அளவு குழி தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தார் சாலை சரியாக போடப்படவில்லை. இதனால் இரு
 மோசமான சாலைக்கு விமோசனம்

அன்னூர்:தினமலர் செய்தி எதிரொலியாக மோசமான சாலைக்கு விடிவு பிறந்தது.

அன்னூர், மோப்பிரிபாளையம், அவிநாசி பேரூராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக அன்னூரில் இருந்து வடக்கலூர் செல்லும் பாதையில் எட்டு இடங்களில் ஆறு அடிக்கு ஆறடி அளவு குழி தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தார் சாலை சரியாக போடப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தினமும் விபத்துக்குள்ளாகினர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று மாநில நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சேதமான எட்டு இடங்களிலும் குழியை மேலும் ஆழப்படுத்தி ஜல்லியை பரப்பி சமன்படுத்தி, அதன் மீது தார் ஊற்றி ரோடு ரோலர் மூலம் மீண்டும் சமன்படுத்தி சேதமான சாலையை சரி செய்தனர். இதனால் கடந்த ஆறு மாதமாக சேதமான பாதையில் சென்ற மக்களின் துன்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X