சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே அப்பயநாயக்கன்பட்டியில் குடும்பத்தகராறில் மனைவி மகள்களை அரிவாளால் வெட்டிய கணவர் சங்கரவேல் சாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்துார் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்பைய நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கரவேல்சாமி, 60. இவர் 2011ல் குடும்பத் தகராறில் மனைவி லிங்கம்மாள், இரண்டு மகள்களை அரிவாளால் வெட்டினார். அப்பையநாயக்கன்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சாத்துார் சப்கோர்ட் நீதிபதி சங்கர் குடும்பத்தினரை வெட்டிய சங்கரவேல்சாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 5000 அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகன் வாதாடினார்.