நாகப்பட்டினம்:'கிராம உதவியாளர் தேர்வில், தி.மு.க., தலையீட்டின் படி, தகுதியற்ற நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' எனக்கூறி, வி.சி., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டத்தில் காலியாக இருந்த, 19 கிராம உதவியாளர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடந்தது. தேர்வானவர்கள் பட்டியல் கடந்த, 13ம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், 'ஆளும் கட்சியினர் தலையீட்டின் படி, தகுதியற்ற நபர்களை வருவாய் துறையினர் தேர்வு செய்துள்ளனர்; பட்டியலை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, வி.சி., கட்சியினர் கோரினர்.
நேற்று, 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர், நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஏ.டி.எஸ்.பி., சுகுமார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.