வயலில் மாடு மேய்ந்ததில்மோதல்: 8 பேர் மீது வழக்கு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடுக்கலுாரை சேர்ந்த ஜான் பீட்டர் மனைவி நெல்சியா 27. இவருக்கும் கடுக்கலுார் கீழ்க்கைக்குடி பகுதியை சேர்ந்த பாத்திமா மேரி 65, என்பவருக்கும் இடப்பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. சம்பவத்தன்று நெல்சியாவின் மாடு, பாத்திமா மேரியின் நெல் வயலில் மேய்ந்தது.
இதனால் ஏற்பட்ட பிரச்னையில் இருவரின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நெல்சியா புகாரில் கடுக்கலூரை சேர்ந்த பாலு, சுமித், இருதயராசு ஆகியோர் மீதும், பாத்திமா மேரி புகாரில் நெல்சியா, விக்டோரியா, நெல்சன், ஜான், ஆரோக்கிய மேரி ஆகியோர் மீதும் திருப்பாலைக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
திருவாடானை: திருவாடானை அருகே அலங்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி முத்துபெருமாள் 80. நேற்று காலை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள் முத்துபெருமாள் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்து சென்றனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
உச்சிப்புளி: உச்சிப்புளி அருகே சாலைவலசையை சேர்ந்த கோவிந்தன் மகன் காளிதாஸ் 20. கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொ.மு.ச., நிர்வாகி மீது வழக்கு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொ.மு.ச., மத்திய சங்க பொதுச்செயலாளர் பச்சமால் நேற்று முன்தினம்ராமநாதபுரம் கிளைக்கு வந்தார். இவரது வருகை குறித்து கிளை செயலாளர் செல்வகுமார் கேட்ட போது மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த செல்வகுமார் புகாரில், பச்சமால் 56, கண்டக்டர்கள் ரமேஷ் 45, தனபால் 40, ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
தற்கொலைக்கு துாண்டிய3 பேர் மீது வழக்கு
தொண்டி: தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் மனைவி ஜோதிமணி 45. தமிழரசன் சவூதியில் வேலை பார்த்து விட்டு, சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். வெளி நாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கு மனைவியிடம் செலவு கணக்கு கேட்டதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இதில் மாமியார் நாகம்மாள் 60, கணவரின் சகோதரி ஆனந்தவள்ளி, கணவர் தமிழரன் ஆகியோர் சேர்ந்து ஜோதிமணியை தாக்கினர். இதில் கவலையடைந்த ஜோதிமணி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
ஜோதிமணி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஜோதிமணி புகாரில் தற்கொலைக்கு துாண்டியதாக தொண்டி போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
டூவீலரில் இருந்துவிழுந்தவர் பலி
தொண்டி: திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 52. டிச.22ல் டூவீலரில் தொண்டியில் இருந்து திருவாடானை நோக்கி சென்றார். காடாங்குடி விலக்கு ரோட்டில் மாடு குறுக்கே சென்றதால் தவறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். முருகன் மகன் விக்னேஸ்பிரபு 27, புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.