திருச்சுழி : திருச்சுழியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 38, இவரும், அதே ஊரைச் சேர்ந்த மாதவன்,32, இருவரும் தனி தனியாக சலூன் கடை நடத்தி வருகின்றனர். திருச்சுழி மாரியம்மன் கோவில் திருவிழா மாசி மாதம் நடைபெறும். திருவிழாவில் பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியினை 15 வருடங்களாக சத்தியமூர்த்தி செய்து வந்துள்ளார். இந்தாண்டு திருவிழாவில் தான் பார்ப்பதாக மாதவன் கூறியுள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில் கத்தரிக்கோலால் சத்தியமூர்த்தியை மாதவன் கையில் குத்தியுள்ளார். சத்தியமூர்த்தி மற்றொரு கத்தரியை எடுத்து மாதவனை குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த மாதவன் மதுரை அரசு மருத்துவமனையிலும், சத்தியமூர்த்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.