இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு புதுமை மற்றும் தொழில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமையில் நடந்தது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக உறுப்பினர் அப்துல் முத்தலீப் வரவேற்றார். வணிகவியல்துறை தலைவர் நைனா முஹம்மது பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவு புதுமை மற்றும் தொழில் மைய கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் சிறப்புரையாற்றினார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர் நன்றி கூறினார்.