கீழச்சிவல்பட்டி : கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கலை அடுத்து தமிழர் திருநாள் விழா மூன்று நாட்கள் நடைபெறும்.
வழக்காடு மன்றம், பாட்டு பட்டி மன்றம், இலக்கிய சொற்பொழிவு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாஷசுவாமி, சிவநெறிக் கழக தலைவர் பிச்சைக்குருக்கள், வள்ளியப்பன், தேனப்பன் பங்கேற்றனர். சோலையப்பன் தமிழ் வணக்கம் கூறினார். பழனியப்பன் வரவேற்றார்.
காங். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, கவிஞர் நாகப்பன் பங்கேற்றனர்.