திருப்பாச்சேத்தி, : திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் இளைஞர்கள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு நுாலகம் திறந்துள்ளனர்.
பச்சேரியை சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வு, உயர் கல்வி,வேலைவாய்ப்பிற்கு புத்தகங்களை தேடி மதுரை, திருப்புவனம், சிவகங்கையில் உள்ள நூலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனை தவிர்க்க சென்னையில் பணியாற்றி வரும் பச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நூலகம் திறந்துள்ளனர்.
விழாவில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ., செந்தில்நாதன் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட நூலகத்தை மாணவர்கள் தான் திறக்க வேண்டும் என அவர்களை வைத்து திறந்தார்.
விழாவில் கவுன்சிலர் ஸ்ரீதரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.