கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் முன் விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டவராயன்பட்டி பழையூரை சேர்ந்த மெய்யப்பன் மகன் ஜெகஜோதி 69, ஆறுமுகம் மனைவி ஜெயந்தி 60, ஆறுமுகத்தின் மகன்கள் பழனிக்குமார் 37, கார்த்தி (எ) பையா கார்த்தி 35, மகள் கார்த்திகா 25 ஆகியோர் மாட்டுப் பொங்கலன்று வீட்டில் இருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் அரிவாளுடன் வந்து இவர்களை வெட்டியது. இவர்கள் திருப்புத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணையில் முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு நடந்துள்ளது தெரிந்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
நேற்று கண்டவராயன்பட்டி சண்முகநாதன் மகன் மணிமுரசு 32, கணேசன் மகன் கலை தினேஷ் (எ) கலை 27 ஆகியோரை கைது செய்தனர்.