மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான்.
இரு தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த இந்த மாணவன், கடைக்கு செல்வதாக கூறி சென்றான். ஆனால் இரவு ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர் உறவினர் உள்பட பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின்பு விசாரித்த போது, சி.டி.சி., அருகேயும், மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த, மேலும் இரு மாணவர்கள், இந்த மாணவரின் நண்பர்கள் ஆவர். மூவரும் ஒன்று சேர்ந்து, காணாமல் போய் இருப்பது, விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர், மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் காணாமல் போன மாணவர்களை தேடி வருகின்றனர்.