திருப்பத்துார்:ஆம்பூர் அருகே, தோல் தொழிற்சாலைகளில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர்சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே நுாற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வரி ஏய்ப்பு செய்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, ஆம்பூர் அருகே, சின்ன கொம்பேஸ்வரம் பகுதியில் உள்ள அல்தாப் தோல் தொழிற்சாலையில், 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சோதனையில் ஈடுட்டனர்.
இந்த நிறுவனததுடன் தொடர்புடைய ஆம்பூர்எ.கஸ்பா பகுதியில் உள்ள, ருமானா தோல் ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று இரண்டாவது நாளாக நடந்த சோதனையில் கணக்கில் வராத சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.