வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-புதுடில்லியில், மூன்று ஆண்டுகளுக்குப் பின், வீரதீரச் செயல் புரிந்த 17 மாநிலங்களைச் சேர்ந்த 56 சிறுவர் - சிறுமியருக்கு, ஐ.சி.சி.டபிள்யு., என்ற இந்திய குழந்தைகள் நல கவுன்சில், நேற்று விருது வழங்கி கவுரவித்தது.
![]()
|
தன்னலமற்ற மற்றும் வீரதீரச் செயல் புரிந்த சிறுவர் - சிறுமியரை கவுரவிக்கும் வகையில், ஐ.சி.சி.டபிள்யு., வீரதீரச் செயலுக்கான தேசிய விருது வழங்கி வருகிறது. இது, கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஐ.சி.சி.டபிள்யு., கடந்த மூன்று ஆண்டுகளில் வீரதீரச் செயல் புரிந்த ௫௬ சிறுவர் - சிறுமியரை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆறு வித விருது களை வழங்கி கவுரவித்தது.
இது குறித்து இந்திய குழந்தைகள் நல கவுன்சில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:
ஐ.சி.சி.டபிள்யு., சார்பில், மார்க்கண்டேய விருது, பிரஹலாத விருது, ஏகலைவ விருது, அபிமன்யு விருது, ஷ்ராவண் விருது மற்றும் துருவ விருதுகள் வழங்கப்பட்டன. இதற்காக, ௫௬ சிறுவர் - சிறுமியர் தேர்வு செய்யப்பட்டனர்.
மார்க்கண்டேய விருது
கடந்த 2020ம் ஆண்டுக்கு, சிறுத்தையுடன் போராடி நண்பனை காப்பாற்றிய, ௧௮ வயது மோஹித் சந்திராவுக்கு வழங்கப்பட்டது. 2021க்கு, நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்றிய, சத்தீஸ்கரைச் சேர்ந்த ௧௬ வயது சிறுவன் அமன் ஜோதி ஜாகிரிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2022க்கு, சிறுத்தையுடன் சண்டையிட்ட உத்தரகண்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நிதின் சிங்குக்கு வழங்கப்பட்டது.
பிரஹலாத விருது
கடந்த ௨௦௨௦க்கு, தண்ணீரில் மூழ்கிய இருவரைக் காப்பாற்றிய உத்தம் டன்டிக்கு வழங்கப்பட்டது. ௨௦௨௧க்கு, மஹாராஷ்டிராவில் தண்ணீரில் மூழ்கிய இருவரைக் காப்பாற்றிய ஆயுஷ் கணேஷ் தப்கிர் என்பவருக்கு வழங்கப்பட்டது.
ஏகலைவ விருது
கடந்த ௨௦௨௦க்கு, தீப்பற்றி எரிந்த வாகனத்துக்குள் சிக்கிய நான்கு குழந்தை களை காப்பாற்றிய அமன்தீப் கவுர் என்பவருக்கும், ௨௦௨௧க்கு, தண்ணீரில் மூழ்கிய குழந்தையை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த ஏஞ்சல் மரிய ஜாய் என்பவருக்கும், ௨௦௨௨க்கு, சத்தீஸ்கரைச் சேர்ந்த சீதாராம் யாதவ் என்பவருக்கும் வழங்கப்பட்டன.
![]()
|
அபிமன்யு விருது
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காப்பாற்றிய ௧௫ வயது ஷானி என்பவருக்கும், தமிழகத்தில் தன் சகோதரியை காட்டெருமையிடம் இருந்து காப்பாற்றிய ௧௩ வயது அப்துல்லா என்பவருக்கும் வழங்கப்பட்டன.
ஷ்ராவண் விருது
மொபைல் போனை பறித்தவர்களுடன் தீரத்துடன் சண்டையிட்ட பஞ்சாபைச் சேர்ந்த குசும் என்பவருக்கும், தாய் மீது மின்சாரம் பாய்ந்ததை அடுத்து, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரதிக் சுதாகர் மானே என்பவருக்கும், கரடியுடன் தீரத்துடன் சண்டையிட்ட ஜோட்சனா குமாரி என்பவருக்கும், இந்த விருது வழங்கப்பட்டன.
தீ விபத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றும்போது, தீயில் சிக்கி உயிரிழந்த ராணுவப் பயிற்சி மாணவர் அமித் ராஜ் என்பவருக்கு, ௨௦௨௦க்கான பாரத் விருது அவரது இறப்புக்குப் பின் வழங்கப்பட்டது.