15 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் பூம்புகார்

Updated : ஜன 21, 2023 | Added : ஜன 21, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
திருச்சி:''உலக அளவிலான மூன்று துறைமுக நகரங்களில், 15 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் பூம்புகார்,'' என, பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், திருச்சி, பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்து, பூம்புகார் பற்றிய கடல் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசாமி
Poompuhar, bharathidasanuniversity, city, civilization, niot,  பழமையான நகரம், பூம்புகார், பேராசிரியர், ராமசாமி, பாரதிதாசன்பல்கலை, நகரம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி:''உலக அளவிலான மூன்று துறைமுக நகரங்களில், 15 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் பூம்புகார்,'' என, பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், திருச்சி, பாரதிதாசன் பல்கலையுடன் இணைந்து, பூம்புகார் பற்றிய கடல் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பூம்புகார் ஆய்வுத்திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், பல்கலை தொலை உணர்வுத்துறை பேராசிரியர்கள் பழநிவேல், சரவணவேல் ஆகியோர் கொண்ட குழு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டது.


திருச்சி, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலை வளாகத்தில், துணை வேந்தர் செல்வம் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கடல் கீழ் பண்டைய பூம்புகார் நகர் கண்டுபிடிப்பு பற்றி, பேராசிரியர் ராமசாமி விளக்கம் அளித்தார்.


அவர் கூறியதாவது: உலக அளவில், இதுவரை அதிகபட்சம், 8,000 ஆண்டுகளுக்கு முந்தைய மூன்று துறைமுக நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 15 ஆயிரம் ஆண்டு பழமையான பூம்புகார் நகரம், கடலுக்குள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் துவாரகாவும், கிழக்கு கடற்கரையில் பூம்புகாரும் மிகச் சிறந்த துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும், எகிப்து வரையிலும் கடல் வணிகத் தொடர்பு இருந்துள்ளது.



latest tamil news

தற்போதைய கடற்கரையில் இருந்து, 40 கி.மீ.,யில், கடலுக்கு கீழே 50 - 100 மீட்டர் ஆழத்தில், 250 சதுர கி.மீ. பரப்பில், 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூம்புகார் துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுக நகரத்தின் அருகே, 80 கப்பல்கள் நிறுத்தும் வகையில், 30 கி.மீ., துாரத்திற்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றி பலவிதமான கட்டடங்கள் இருந்துள்ளன. இது தவிர, இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள், மாயவரம் பகுதியில் கடல் இருந்ததற்கான அடையாளங்களாக மணல் மேடுகள் தென்படுகிறது.


கடல் மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து, 6,000 ஆண்டுகளுக்கு முன், மாயவரத்தை அடைந்து இருக்கலாம் என்பதற்கான தடயங்களும் உள்ளன.ஆழிப்பேரலை, சுனாமி, கடல் மட்டம் உயர்வு மற்றும் புயல் போன்ற பேரிடர் காரணங்களால், பூம்புகார் நகரங்கள் அழிந்திருக்க கூடும் எனக் கருதப்படுகிறது.இந்த ஆய்வுத் திட்டத்தில், அடுத்த கட்டமாக, 'லெமுரியா' எனும் குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (21)

GOWRI RENGANATHAN - Kumbakonam,இந்தியா
27-ஜன-202313:33:57 IST Report Abuse
GOWRI RENGANATHAN வணக்கம் கடலுக்கு அடியில் சென்று ஆய்வு செய்வதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kalyanaraman - Chennai,இந்தியா
21-ஜன-202322:59:08 IST Report Abuse
Kalyanaraman தமிழக அரசு கடலுக்குள் பேனாவை புதைப்பதற்கும் சேது சமுத்திர திட்டத்திற்கும் செலவு செய்வதற்கு பதிலாக பூம்புகார் கடலுக்குள் புதைந்துள்ள நம் பண்டைய அறிவியல், தாெழில் நுட்பம். தாென்மையை கண்டுபிடிக்க / வெளிக்கொணர செலவிட்டால் பல தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்குமே.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
21-ஜன-202321:26:13 IST Report Abuse
Nagarajan D அதெல்லாம் கிடையாது,,, இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின்னர் தான் இந்தியாவில் படிக்கவே ஆரம்பித்தோம், கிறிஸ்துவர்களின் வருகை தான் நமக்கு படிப்பை கொடுத்தது என்று இங்கே இருக்கும் காந்தி நேரு ராமசாமி கூட்டமம் உலக விளங்காதவனுங்க அந்த சிவப்புக்கொடி அயோக்கியனுங்க ஆரம்பிப்பானுங்க. நமது முதல்வரும் அவரது கொத்தடிமைகளும் உதய் அண்ணா தான் தமிழகத்தின் கல்வி கண்ணை திறந்தார் என தங்கமுடியும் லிப்ஸ்டிக் வாயனும் ஆரம்பிப்பானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X