அம்மா... போர் அடிக்குதும்மா... என்று சொல்லும் குழந்தைகள், மொபைல் போன் பார்க்க, பீடிகை போடுகிறார்கள் என்று சொல்லாமல் சேதி சொல்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல், நம்மை தொந்தரவு செய்யாமல் விட்டால் போதும் என்ற மனநிலைக்கு, பெரும்பாலான பெற்றோர், மொபைல் போனை, குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு, தங்கள் வேலையில் மூழ்கி விடுகிறார்கள். ஆனால், இது மிகவும் தவறு. குழந்தைகள் கண்பார்வை, மொபைல் போனில் விளையாடும் விரல்களின் தொடு உணர்வு பாதித்து, பல பிரச்னைகளை, இந்த வயதிலேயே உருவாக்கி விடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதும் பல குழந்தைகள், கண் பார்வை பாதித்து, கண்ணாடி அணிந்திருப்பதை பார்க்கும் போது, வேதனையை ஏற்றி விடுகிறது.
இதற்கு என்ன தான் வழி. மொபைல் போனை விட்டால், கார்ட்டூன் சேனல்கள். அதுவும் பொழுது போக்கத்தான். மாற்று வழி இருக்கிறது... ஒன்று விளையாட்டு. உடல் ஆரோக்கியத்துக்கு வித்திடுகிறது விளையாட்டு. தாராளமாக விளையாட விடுங்கள். வெற்றி மட்டுமல்ல... தோல்வியும் ருசிக்கும் என்று கற்றுக் கொடுங்கள். விட்டுக் கொடுக்கும் உணர்வு, விளையாட்டில் கற்றுக் கொள்ள வைக்கும். அடுத்ததாக... கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். அதற்கு வழி காட்டுகிறது, நல்ல புத்தகங்கள். துவக்கத்தில் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதை பழக்கப்படுத்தினால், குழந்தைகளின் வாழ்வில் தானாக வரும் மாற்றம்.
அதற்கு, வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது, சப்னா புக் ஹவுஸ். இதன் 56வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் 26 முதல் பிப்., 5 வரை, கோவையில் ஆர்.எஸ்.புரம் மற்றும் ப்ரோசோன் மாலில் அமைந்துள்ள அதன் கிளைகளில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த ஆண்டின் சிறப்பாக, குழந்தைகளை ஊக்குவிக்க புத்தகங்களுக்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளனர். அனைத்து வகையான ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களுக்கும் சிறப்பான தள்ளுபடியும் வழங்க உள்ளனர்.
மாணவர்களுக்கான தேவையான Store 67 நோட்டு, புத்தகங்களுக்கும், சிறப்பான தள்ளுபடி உண்டு. அரிய வாய்ப்பை விட்டு விடாதீர்கள் குழந்தைகளே...!
புத்தகத்தை படிக்கும் போதுகீழிருக்கும் உங்கள் வாழ்க்கைமேல் நோக்கி நகரும்.