கோவை:பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் செயினை திருடிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை புலியகுளம், அம்மன் குளத்தை சேர்ந்தவர் ஷாலினி, 23. தனியார் மருத்துவமனையில் கணக்காளர். நேற்று முன்தினம் புலியகுளம், தாமு நகரில் இருந்து அரசு பஸ்ஸில், லட்சுமி மில்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பஸ் லட்சுமி மில்ஸ் சந்திப்பு வந்த போது, கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், செயினை திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.