மதுக்கரை:ஈச்சனாரி அடுத்து 'எல் அண்ட் டி' பை பாஸ் சாலை சந்திப்பில், எல் அண்ட் டி போக்குவரத்து உட்கட்டமைப்பு நிறுவனம் சார்பில், 34வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
நேற்று நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை, எல் அண்ட் டி நிறுவன திட்ட தலைவர் சுரேஷ் சங்கரநாராயணன் முன்னிலையில், மதுக்கரை எஸ்.ஐ., செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து டிரைவர்கள், பயணித்தோருக்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு அடங்கிய நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அபிராமி கல்லூரி தலைவர் டாக்டர் பெரியசாமி, 'டீன்' அரவிந்த்பாபு உள்பட, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.