கோவை:கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார், எட்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை ரத்தினபுரி சங்கனுார் ரோடு சந்திப்பில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் சோதனையில், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோவை காரமடையை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்து, 8 கிலோ கஞ்சா, ரூ.42 ஆயிரம், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், மாணிக்கம் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர்.