போத்தனுார்;ஈச்சனாரி அருகேயுள்ள கற்பகம் பல்கலையில், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.
அசோக் லேலண்ட் (சென்னை) நிறுவன துணை தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:
இளைஞர்களின் எதிர்காலம் கனவுகளால் கட்டமைக்கப்படுகின்றன. இக்கனவுகள் தன்னம்பிக்கையால் வலுப்பெறுகின்றன. வலுவான கனவுகள் சிறந்த முயற்சியாக வெளிப்படுகின்றன. இம்முயற்சியில் ஏற்படும் தடைகளை, மாணவர்கள் தங்களது ஆர்வத்தால் வெல்லலாம். படிப்பை முடித்து செல்வோரிடம், பொதுநல மனப்பான்மை இருக்கவேண்டும். கல்வியின் பயன், சமுதாயத்திற்கு நிறைவாக சென்றடைய மாணவர்கள் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, கலை, அறிவியல், இன்ஜி., மருந்தியல் மற்றும் ஆர்க்கிடெக் துறைகளில் தேர்ச்சி பெற்ற, 2,179 பேருக்கு பட்ட சான்றிதழை, கல்வி குழும தலைவர் வசந்தகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா உள்ளிட்டோருடன் இணைந்து வழங்கினார்.
வேந்தர் ராமசாமி தலைமை வகித்தார். கல்வி குழும நிர்வாக அறங்காவலர் தமயந்தி, பல்கலை துணை வேந்தர் வேங்கடாசலபதி, பதிவாளர் ரவி, 'டீன்' தமிழரசி, பேராசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.