பேரூர்:தை அமாவாசையையொட்டி, பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டும், தை அமாவாசை தினமான நேற்று, காலை முதலே, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள், தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின், ஏழைகளுக்கு புத்தாடை மற்றும் உணவு தானம், பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டனர்.