கோவை:சரவணம்பட்டி புரோசோன் மாலில் நடந்து வரும் 'எண்டு ஆப் சீசன் சேல்' இன்றுடன் நிறைவடைகிறது.
புரோசோன் மால் தலைமை மேலாளர் (நிதி மற்றும் நிர்வாகம்) பாபு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில், செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் முரளி கூறியதாவது:
புரோசோன் மாலில் 'எண்டு ஆப் சீசன் சேல்' என்ற பெயரில் நடந்து வரும், 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி விற்பனை மேளா ஜன., 22ம் தேதியுடன் (இன்று) நிறைவடைகிறது.
மேளாவில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான துணிகள், காலணிகள், மொபைல்போன்கள், மொபைல் உதிரிபாகங்கள், கண் கண்ணாடிகள், சுற்றுலா பேக்குகள், உணவுகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கலாம்.
இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை, வாடிக்கையாளர்கள் புரோசோன் மாலின் பார்க்கிங் பகுதியை, கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.