திருப்பூர்:கொடுவாயை சேர்ந்தவர் அருணகிரி, 52. கடந்த ஏப்., 14ம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஈரோடு சென்று விட்டு திரும்பினார். இவரது வீட்டு பூட்டை உடைத்து, 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் திருடு போனது.
புகாரின் பேரில், அவிநாசிபாளையம் போலீசார் செந்தில்குமார், 52, சுரேந்திரன், 38 ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டாசில் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., சஷாங் சாய், கலெக்டர் வினீத்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.