மங்களூரு-மங்களூரில் கஞ்சா போதையில் இருந்த மேலும் இரண்டு டாக்டர்கள், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்சிண கன்னடா மங்களூரில் கடந்த 11ம் தேதி கஞ்சா கடத்தியதாக இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய வழக்கில், நேற்று மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் இரண்டு பேர் டாக்டர்கள். கே.எம்.சி., மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். ஏழு பேர் மருத்துவ கல்லுாரி மாணவர்கள். மேலும் சிலர் தலைமறைவாகி விட்டனர். மங்களூரு போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து கே.எம்.சி., மருத்துவமனை நிர்வாகம், அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.