பெங்களூரு,--மறைந்த நடிகர்கள் புனித் ராஜ்குமார், சஞ்சாரி விஜய் மறைவை தொடர்ந்து கர்நாடகாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்தள்ளது.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவரும் கண்தானம் செய்திருந்தார்.
இதே போல தேசிய விருது பெற்ற நடிகர் சஞ்சாரி விஜய் தனது உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தார். இவர்கள் மறைவுக்கு பின், கர்நாடகாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வது அதிகரித்துள்ளது.
இதன்படி, 2022 ல் மட்டும் கர்நாடகாவில் 151 பேர் உடல் தானம் செய்துள்ளனர்.
இப்பட்டியலில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கண், சிறுநீரகம், கல்லீரல், இதயம் உள்ளிட்ட 770 உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 194 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது.
விபத்து, நோய் மற்றும் தற்செயலான நிகழ்வுகளாலும், மூளை செயலிழப்பு போன்ற சமயங்களிலும் உறுப்பு தானம் செய்யப்படுகிறது. உறுப்பு தானம் செய்வதற்கு முன், உறவினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட துறையின் அனுமதியுடன் திறமையான மருத்துவர்களால், உறுப்புகள் எடுக்கப்படுகிறது.
உடல் உறுப்பு தானம் செய்வதில், இதுவரை அக்கறையின்மை இருந்தது. ஆனால், நடிகர்களின் உடல் உறுப்பு தானத்தால் ஈர்க்கப்பட்டு, பலரும் இந்த தொண்டு பணியில் கைகோர்த்துள்ளனர்.