தார்வாட், -தார்வாட் ஐ.ஐ.டி., திறந்து வைக்க பிப்., 6ம் தேதியும்; ஷிவமொகா விமான நிலையத்தை திறந்து வைக்க, பிப்., 27ம் தேதியும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் கர்நாடகா வருகிறார்.
சட்டசபை தேர்தலை ஒட்டி, கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து, அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இந்த வகையில், இம்மாதம் 12ம் தேதி ஹுப்பள்ளிக்கும்; 19ம் தேதி யாத்கிர், கலபுரகிக்கும் வந்தார். இதற்கிடையில், பிப்., 6ம் தேதி மீண்டும் கர்நாடகா வருகிறார்.
அன்றைய தினம் தார்வாடில் ஐ.ஐ.டி., எனும் இந்திய தொழில்நுட்ப கழகத்தை திறந்து வைக்கிறார். பிப்., 27ம் ஷிவமொகாவுக்கு வந்து புதிய விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை சேர்க்கும்படி பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் நிலுவையில் உள்ள மத்திய, மாநில அரசு திட்டங்களை விரைவில் முடிக்கும்படியும்; தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே துவக்கி வைக்க, மோடி திட்டமிட்டுள்ளார்.